குடியுரிமை/விசா அலுவல்கள்
முகப்பு > சேவைகள் > குடியுரிமை/விசா அலுவல்கள்
உங்களுக்காக என்றும்
குடியுரிமை/விசா அலுவல்கள்
சரஸ் சேவைகள் பல தசாப்தங்களாக எம் உறவுகளுடன் பயணித்து வருங்கின்றது. பல்வேறு கருமங்களில், அரச மற்றும் தனியார் துறைகளிற்கு மொழிபெயர்ப்புக்களை வழங்கிய அனுவங்களினூடாகவும், பல வழக்கறிஞ்ஞர்களின் பின்புலத்துடனும் யேர்மனியில் வசிப்பதற்கு எவ்வாறு வீசாக்களைப் பெற்றுக் கொள்வது என்பது குறித்து விவரமாகவும் விளக்கமாவும் எம் உறவுகளுக்கு ஆலோசனை வழங்க சரஸ் சேவைகளாகிய எங்களால் முடியும்.
எம் உறவுகளில் சிலர் யேர்மனியில் அரசியல் தஞ்சம் கோரி அதன் முடிவிற்கு காத்திருக்கலாம், சிலருக்கு நிராகரிப்பட்டிருக்கலாம், இன்னும் சிலர் நீலப் புத்தகத்தில் இருந்து இலங்கைப் கடவுச் சீட்டிற்கு மாற்ற யோசிக்கலாம், இவ்வாறு பல கட்டங்களில் இருக்கும் எம்மவருக்கு ஏற்ற ஆலோசனைகள் வழங்கிப்படும்.
பின்குறிப்பு: சந்திப்புநேரங்களை ஒழுங்கு செய்வதாயின் முன்னர் எங்களுடன் தொடர்பு கொள்ளுங்கள்.
Receive a quote for your document
யேர்மனியில் அரசியல் தஞ்சக் கோரிக்கை கோரியவர்களுக்கு, நிராகரிக்கப்பட்டவர்களுக்கு:
யேர்மனியில் புதிதாக அகதி அந்தஸ்துக் கோரி இருப்பவர்களும், அகதி அந்தஸ்து நிராகரிக்கப்பட்டவர்களுக்கும் தற்காலிக சூழ்நிலைக்கு ஏற்ப ஆலோசனைகளும் அதற்கேற்ப வழிமுறைகளும் செய்து தரப்படும் (Asylangelegenheiten).
அந்த வகையில் நீங்கள் தற்போது இருக்கும் சுழ்நிலைகளுக்கு ஏற்ப்ப எந்த வதிவிட பிரிவு சட்டத்தின் கீழ் நீங்கள் வதிவிட உரிமையை பெறலாம் என்பது பற்றி உங்களுக்கு ஆலோசனைகள் வழங்குவதுடன் அதற்கான வழிமுறைகளை செயற்படுத்திதரவும் சரஸ் சேவைகள் தயாராக இருக்கின்றது.
- நீங்கள் Duldung ல் 6 வருடம் இருந்தால் வதிவிடவுரிமை சட்டப்பிரிவு 25bல் விண்ணப்பம் செய்யலாம்.
- நீங்கள் குடும்பமாக 4 வருடம் ஜெர்மனியில் இருப்பவராக இருந்தால் சட்டப்பிரிவு 25Aல் விண்ணப்பம் செய்யலாம்.
- நீங்கள் 27 வயதுக்கு உட்பட்டவராகவும் ஜெர்மனியில் 3 வருடமும் இருந்திருந்தால் சட்டப்பிரிவு 25Aல் விண்ணப்பம் செய்யலாம்.
- Duldung ல் இல்லாமல் சாதாரன வீசாவில் உள்ளவர்கள் 5 வருடம் ஜெர்மனியில் இருப்பதோடு எந்த குற்றச் செயல்களிலும் ஈடுபடாதவராக இருந்திருந்தால் சட்டப்பிரிவு 25A மற்றும் 25bல் விண்ணப்பம் செய்யலாம்.
- நீங்கள் 18மாத காலம் Duldung வீசாவில் வேலை செய்தவராக இருந்து இருந்தால் நீங்கள் காலவரையற்ற Beschäftigung Duldung வீசாவிற்கு விண்ணப்பம் செய்யது சிறிது காலத்தின் பின்பு வதிவுரிமை வீசாவிற்கு விண்ப்பிக்கலாம்.
- நீங்கள் Ausbildung எனப்படும் தொழிழ்துறைசார்ந்து கல்வி பயில்பவராக இருந்தால் 65Bல் வதிவிட உரிமையை பெற்றுக் கொள்ளலாம்.
- நீங்கள் இருக்கும் சமூகத்தில் உங்களை ஒன்றிணைத்து அதாவது ஜெர்மன் மொழியை கற்று இருந்தாலோ அல்ல சமூகசேவை (Social Arbeit) போன்று எதாவது நீங்கள் செய்திருந்தால் அந்த அடிப்படையிலும் நீங்கள் வதிவிட உரிமைக்கு விண்ணப்பம் செய்யலாம்.
- உங்களுடைய அகதிதஞ்ச கோரிக்கை வழக்கு நடப்பில் இருக்கும் போதே அதை ரத்து செய்யாமால் நீங்கள் உங்களுக்கு பொருந்த கூடிய வதிவிட உரிமை சட்டத்தின் கீழ் வதிவிட உரிமைக்கு விண்ணப்பம் செய்யலாம்
- அகதி அந்தஸ்து மற்றும் ஏனைய விடயங்களுக்கும் வழக்கறிஞர்களை நியமித்தல் மற்றும் வழக்கறிஞர்களின் ஆலோசனைகளை பெறுவதற்கும் ஒழுங்கு செய்து தரப்படும்.
யேர்மனியில் இலங்கைக் கடவுச்சீட்டு பெறுவதற்கு
- யேர்மனியில் உள்ள இலங்கையர்கள் இலங்கை கடவுச்சீட்டை (Sri Lankan Passport) பெற விரும்பினால் அதற்கான ஆலோசனைகள் மற்றும் முழுமையான அனைத்து அலுவலக செயற்பாடுகளும் துரிதகதியில் செய்து தரப்படும்.
- குறிப்பாக ஆங்கில மொழி பெயர்ப்புக்கள் மற்றும் பழைய கடவுச் சீட்டுத் தொலைந்துவிட்டது என்று நொத்தாரிசிடம் சத்தியக் கடுதாசி எடுத்தல்
நிரந்தர விசா (Niederlassungserlaubnis) மற்றும் / யேர்மன் குடியுரிமை பெறுதல் (Deutsche Staatsbürgerschaft)
- குறுகிய காலமாக வதிவிட அனுமதி பெற்றவர்கள் நிரந்தர விசாவைப் பெறுவது குறித்த ஆலோசனைகள் வழங்கப்படும். அதற்கான ஒழுங்குகள் செய்து தரப்படும். நீண்டகாலமாக யேர்மனியில் வசிக்கும் நபர்கள் யேர்மன் குடியுரிமையைப் பெற என்ன வழிமுறைகள் இருக்கின்றன என்ற ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ளலாம்.
சுற்றுலா விசா விண்ணப்பங்கள் (Tourist Visum)
- கனடா, லண்டன், இந்தியா மற்றும் ஏனைய நாடுகளிற்கான சுற்றுலா விசா ஒழுங்குகள் (Kanada & London & Indien Tourist Visum) செய்து தரப்படும். சுற்றுலா விசாவில் வெளிநாட்டிற்கு செல்லத் திட்டமிட்டிருக்கும் திகதிக்கு குறைந்தது 2 மாதங்களிற்கு முன்னர் எம்முடன் தொடர்பு கொள்ளுங்கள். விசா விண்ணப்பங்கள் எம்மூடாகச் செய்து கொள்ளலாம்.
வாழ்க்கைத் துணை விசா (Ehegattenvisum / Familienzusammenführung)
- யேர்மனியில் வீசா உள்ளவர்கள் (நீலப்புத்தகம்/குடியுரிமைஉள்ளவர்கள்) அவர்களின் துணையை இலங்கையில் இருந்தோ அல்லது பிற நாடுகளிருந்தோ „Sponsor“ மூலமாக வரவழைப்பதற்கான ஆலோசனைகள் மற்றும் அலுவலக செயற்பாடுகள் செய்து தரப்படும்.
மேற்குறிப்பிட்ட விடயங்கள் தொடர்பாக தொலைபேசி ஊடாக நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கு அடிப்படை ஆலோசனைகள் மற்றும் விபரங்கள் மட்டுமே வழங்கப்படும் மேலும் விபரமான ஆலோசனைகள் மற்றும் விபரங்களை பெற நேரடியான சந்திப்பு நேரத்தினை எம்மிடமிருந்து பெற்று எமது அலுவலகத்திற்கு (Saras Services Stuttgart) வருகைதந்து அனைத்து விடயங்களையும் அறிந்துகொள்ளலாம்! (இதற்காக சிறிய கட்டணம் ஒன்று அறவிடப்படும்) |